உருளைக்கிழங்கு பற்றீஸ், அதிகம் காரம் அதிகம் காரம் இல்லாது தயாரிக்கும் செயன்முறை. Potato Patties, made with mild spicy curry and crispy snack, enjoy your evening.
15 உருளைக்கிழங்குகளை தண்ணீரிலே நன்றாக வேகவைத்து தோல்நீக்கி,கைகளினால் அல்லது மத்தினால் மசித்து தனியாக எடுத்து வைக்கவும்.
அடுப்பில் ஒரு தாழியை வைத்து, நல்லெணெய் விட்டு,சூடாகியதும்- சிறிது கடுகினைப்பொரியவிட்டு, கடுகு நன்றாக வெடித்ததும் , வெங்காயம், இஞ்சி,உப்பு, மஞ்சள்தூள், மிளகாத்தூள் சேர்த்துபொன்னிறமாக வறுக்கவும்.
இப்போது எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கினையும் விருப்பத்திற்கு ஏற்ப ஏனைய காய்கறிகளையும் சேர்த்து ஒன்றாக நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி மூடிபோட்டு மூடி அடுப்பினை அணைத்து, கறியினை ஆறவிடவும்.
இப்போது பற்றீஸ் செய்வதற்கு தேவையான உள்ளுடன் (கறி) தயாராகிவிட்டது.