Pidi Kolukattai
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் பாரம்பரிய முறைப்படி தயாராகும் கொழுக்கட்டை வகைகள், பல்சுவையுடன் வாசனையாகவும் இருக்கும் . இனிப்புவகை பலகாரம் அரிசி பிடி கொழுக்கட்டை , இப்பதிவில் வழங்கப்படுகின்றது.
No ratings yet
Prep Time 20 mins
Cook Time 15 mins
Course Dessert
Cuisine Indian
Servings 4
Ingredients
- 1 pinch உப்பு தேவையான அளவு
- 1 cup சர்க்கரை
- 1 tsp சுக்கு பொடி
- 1/2 cup தண்ணீர்
- 1/2 cup தேங்காய்ப்பூ தேங்காய்ப்பூவை இலேசாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
- 1 tsp ஏலக்காய் பொடி
- 1 cup அரிசிமா
- 1/2 Cup அரசி குருணல் ( chopped Rice)
Instructions
ஒரு கடாயை அடுப்பில்வைத்து மிதமான தீயில் 1 கப் பனைவெல்லம் அல்லது சர்க்கரையை சேர்த்து 1/2 கப் அளவு தண்ணீர் விட்டு கிளறவும். அதனுள் ஒரு தேக்கரண்டியளவு உலர்ந்த சுக்குப்பொடியினை (dry ginger powder) சேர்த்து ஒன்றாக கலந்துவிடவும். சர்க்கரை பாகு இரண்டுமுறை கொதித்து வந்தவுடன்(கம்பிபதம் தேவையில்லை) இறக்கி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்த்து வடித்து வைத்துக்கொள்ளவும்.
- கொழுக்கட்டை மாவு கிளறுவதற்கு ஏற்ப அடி கனமான ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து அது சூடானவுடன், தயாரித்து வைத்துள்ள சர்க்கரை பாகினை சேர்த்து சிறிது கொதிக்கவிடவும்.
- அடுத்து, ஏற்கனவே எடுத்து வைத்துள்ள அளவுகளின்படி, தேங்காய்ப்பூ ,ஏலக்காய் பவுடர், உப்பு, அரிசிமா , குருணல் அரிசி இவை அனைத்தையும் ஒன்றாக சர்க்கரை பாகினுள் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
- இப்போது மாவின் பதம் இடியப்பத்திற்கு மாவு கிளறுவதுபோல சட்டியில் ஒட்டாமல் வரும்.
- உடனே அடுப்பைவிட்டு பாத்திரத்தை இறக்கி, திரும்பவும் கட்டியில்லாதவாறு நன்றாக கிளறிவிடவும்.
- கை பொறுக்கும் வெப்பத்திலே மாவு உள்ளபோதே ,உங்கள் கையால் கொஞ்சம் மாவினை எடுத்து உள்ளங்கையில் வைத்து கொழுக்கட்டையை இறுக்கமாக தனித்தனியாக பிடித்து , ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
- இப்போது, அடுப்பில் இட்லி பாத்திரத்திலே நீர் விட்டு, கொழுக்கட்டை அவிப்பதற்காக கொதிக்க விடுங்கள் .
- அடுத்து, இட்லி தட்டிலே நல்லெண்ணெய் பூசி, பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக , இட்லி தட்டு முழுவதும் இடைவெளி விட்டு அடுக்கி வேக வையுங்கள்.
- ஏற்கனவே பாதி மா வெந்து இருக்கும் என்பதால், கொழுக்கட்டை விரைவாகவே நீராவியில் வெந்துவிடும்.
- இறுதியாக இட்லி பாத்திரத்தின் மூடியை திறந்து, ஒரு தட்டிற்கு அவித்த கொழுக்கட்டைகளை ஒரு தட்டிற்கு மாற்றி வையுங்கள்.
- இப்போது சுவையான பிடிகொழுக்கட்டை தயார்.
Notes
கொழுக்கட்டையின் சிறப்புகள்.
- இந்து கடவுளான விநாயகருக்கு மிகவும் பிடித்த பலகாரம் கொழுக்கட்டை.
- விநாயக சதுர்த்தசி கொண்டாட்டத்தின்போது நிவேதனமாக விநாயகருக்கு படைத்து வழிபாடு செய்வார்கள்.
- நீராவியில் வேகவைக்கும் உணவு பதார்த்தம் என்பதால், ஆரோக்கியம் மிக்கது.
- இனிப்பு சுவையுடன் உள்ள பிடி கொழுக்கட்டை அனைவரையும் மகிழ்விக்கவல்லது.
- இனிப்பு / தேங்காய் பூரண கொழுக்கட்டை ,
- கார கொழுக்கட்டை
- பால் கொழுக்கட்டை
- பல்லு கொழுக்கட்டை
- ரவா கொழுக்கட்டை
- பயறு கொழுக்கட்டை
Tried this recipe?Let us know how it was!