புளிக்கூழ்

புளிக்கூழ் / Tamarind koozh

குளிர்காலத்திற்கு உகந்த புளிக்கூழ் ஆரோக்கியமானதும், உண்பதற்கு இலகுவானதுமான கூழ் வகையை சேர்ந்தது.
No ratings yet
Prep Time 15 mins
Cook Time 30 mins
Course Dessert, Soup
Cuisine Indian
Servings 10

Ingredients
  

  • 1 tbsp புளி (small lemon size) சிறிய எலுமிச்சம் பழம் அளவில் புளியை எடுத்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • 1 tsp உப்பு தேவையான அளவு
  • 1 tsp கடுகு தேவையான அளவு
  • 1 cup நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 3 சிவப்பு மிளகாய்
  • 1 pinch பெருங்காய பொடி
  • 1/4 cup கருவேப்பிலை
  • 3 cup தண்ணீர்
  • 1 cup அரிசிமா (சிவப்பு / வெள்ளை) வறுத்தது

Instructions
 

முதலில், ஓர் பத்திரத்தினை எடுத்து அதனுள், தயாராக எடுத்து வைத்திருக்கும் அரிசிமா,புளிக்கரைசல், உப்பு, பெருங்காயப்பொடி ,ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.

  • ஓர் கடாயை அடுப்பிலே வைத்து மிதமான தீயிலே வைக்கவும்.
  • அடுப்பிலே இருக்கும் கடாய், மெலிதான வெப்பத்தில் உள்ளபோதே-அதனுள் 2 மேசை கரண்டி நல்லெண்ணெய் விட்டு, கடுகு , சிவப்பு மிளகாய், கருவேப்பிலை இம் மூன்று பொருட்களையும் போட்டு பொரிய விடவும்.
  • கடுகு முழுவதும் வெடித்தபின்,எடுத்துவைத்துள்ள மா கரைசலை ஒரு கையால் ஊற்றிக்கொண்டே , மறுகையால் கடிகள் விழாதவாறு கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • எடுத்து வைத்துள்ள நல்லெண்ணெயில் மிகுதியாக உள்ளதை முழுவதுமாக மா கரைசலுடன் சேர்த்து கிளறவும்.
  • சட்டியில் ஒட்டாமல் மாவின் பதம் வரும்போது அடுப்பை அணைத்து இறக்கி வைத்துவிடவும்.
  • சுவையான, ஆரோக்கியமான புளிக்கூழ் தயார்.

Notes

*கடுகு முழுவது வெடித்து பொரிந்திடவேண்டும், ஆனால் கருகிவிட கூடாது.
*புளிக்கு பதிலாக மோர் கரைசலையும் பயன் படுத்தலாம்,அதுவே மோர்கூழ் என அழைக்கப்படும்.
*களி இறுக்கமாக இருப்பது போல அல்லாமல் புளிக்கூழில், தண்ணீர் தன்மையின் நெகிழ்வாய் இருப்பதே அதன் சிறப்பாகும்.
*தேவையேற்படடால் , தேங்காய் சொட்டுகளையும், முந்திரி பருப்பு போன்றவற்ரையும் இந்த களியுடன் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்தும் தயாரிக்கலாம். 
புளி கூழின் பயன்கள்
  • சிறுவர்கள் முதல் வயதானவர்கள்வரை பற்களால் அரைத்து உணவினை உண்ண சிரமப்படும் அனைவருக்கும் உண்பதற்கு ஏதுவான உணவு ஆகும்.
  • சிலர் காய்ச்சல், உடற்சோர்வு, கர்ப்பகாலம், போன்ற வேளைகளில், வாய்க்கு ருசியாக புளிப்பு சுவையினை உடைய உணவினை விரும்பி உண்ண எண்ணுவார்கள்.அவ்வாறான நேரத்திலே இந்த புளிக்கூழ் சிறந்தது.
  • குளிர் காலத்திற்கு ஏற்ப இலகுவில் உணவு செரிமானம் அடைய ஏதுவான சிற்றுண்டி வகைகளில் புலிக்கூழும் அடங்கும்.
Tried this recipe?Let us know how it was!

Related Topics

Sowmya Kirubakaran

Vibakya Founder

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Featured Articles
Promoted
Explore