இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது பாரம்பரிய விழுமியங்களை பின்பற்றியே வாழ்ந்து வருகின்றோம்.
எமது தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையில் எங்களது வாழ்க்கை முறைமையை சீராக வழிநடத்தி செல்லுவதற்கு, எங்களது மூதாதையரிடம் இருந்து நாம் செவிவழியாகவும், எழுத்து வடிவமாகவும், அனுபவரீதியாகவும், காலங்காலமாக பல நீதி நெறிகளையும், சம்பிரதாயங்களையும், பழக்கவழக்கங்களையும் பின்பற்றி வருகின்றோம்.
தமிழ் மக்களின் கலை, பண்பாடு, சமயம், உணவுமுறை, ஆரோக்கியம் போன்றவற்றின் முக்கியத்துவத்தினை எமது அடுத்த சந்ததியினருக்கும் எடுத்துச்செல்லும் உயரிய நோக்குடன் விபாக்யா என்னும் எமது இணையத்தளம், கனடாவில் இருந்து இயங்கி வருகின்றது.
இயந்திரகதியிலே இயங்கும் மனிதர்களாகிய நாங்கள், எமக்கு கிடைத்துள்ள நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாய் பயன்படுத்தலாம் என்பற்கான வழிகாட்டியாக அமைவதே எமது நோக்கம்.
எமது இணையத்தளமானது இந்து சமயம், தமிழ்க்கல்வி, இசைப்பிரிவு, காய்கறி & சிறுதானிய உணவுமுறை (சைவ உணவு குறிப்புகள்), ஆரோக்யம், கோலம், அழகு குறிப்புகள் என்பனபற்றிய, அறிவுத்திறனை தமிழர்கள் மத்தியிலே இன்னும் விரிவுபடுத்துமுகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடைமுறை வாழ்க்கையில் எமது பண்டைய நாகரீகங்களையும், பழக்கவழக்கங்களையும், கலாச்சாரத்தினையும் நாமும் அடுத்த தலைமுறையினரும் பின்பற்றி பலன் பெற உதவும் நோக்குடன் எமது இணையத்தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.