ரவாகேசரி

Rava Kesari

ரவா கேசரி

5 from 1 vote
Prep Time 10 mins
Cook Time 15 mins
Course Snack
Cuisine Indian
Servings 5

Ingredients
  

  • 2 cup ரவை
  • 1/2 cup சீனி தேவையான அளவு
  • 1 pinch கேசரி பவுடர் 3 அல்லது 4 துளி food colour
  • 4 cup தண்ணீர் தேவையான அளவு
  • 1 pinch உப்பு தேவையான அளவு
  • 1 pinch ஏலக்காய் பொடி தேவையான அளவு
  • 25 g முந்திரி பருப்பு (Cashew Nut) தேவையான அளவு
  • 25 g முந்திரியை வத்தல் (Dry grapes) தேவையான அளவு
  • 1/2 cup நெய் (Gee)

Instructions
 

ஒரு பாத்திரத்தை (கடாயை) அடுப்பில் வைத்து மிதமான வெப்பத்தில் இரண்டு தேக்கரண்டி நெய்யினை அந்த கடாயில் ஊற்றி அது மிதமான வெப்பம் ஆகும்போது, தயாராக எடுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு , உலர் திராட்சை அனைத்தையும் பொன்னிறமாக (golden color)நெய்யில் வறுத்து தனியாக ஒருபுறம் எடுத்து வைக்கவும்.அதன் பின்பு மிகுதியாக சிறிது நெய் அந்த கடாயில் இருக்கும் அதே பாத்திரத்தில் ரவையினை சேர்த்து , அதன் நிறம் பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்து தனியாக ஆற வைக்கவும்.

  • முதலில் மிதமான தீயிலே (Stove – medium flame) எரியும் அடுப்பில் , அடி கனமான கடாயை(Nonstick Pan) வைத்து அதனுள் 4 கப் தண்ணீரினை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
  • தண்ணீர் சூடாக ஆரம்பமாகும்போது அதனுள் சீனி, கேசரி பவுடர்,ஏலக்காய் பொடி மூன்றையும், மிகவும்சிறிதளவேயான உப்பினையும்(salt-optional)சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • தண்ணீர் நிறம் ஆரஞ்சு நிறமாக மாறி , குமிழிகள் போல நன்கு கொதித்து வருவதை இப்போது காணலாம்.
  • இதேபோல தண்ணீர் 2 முறை நன்கு பொங்கிவரும்போது, ரவையினை சேர்ப்பதற்கான கொதிநிலையினை அது அடைந்திருக்கும்.
  • இந்த தருணத்தி தயாராக எடுத்து வைத்துள்ள வறுத்த ரவையினை ஒரு கையால் தொடர்ந்து தூவிக்கொண்டே இருக்க மறுகையால் இடைவிடாமல் கேசரியினை கட்டிகள் இல்லாமல் கிளறிவிட்டுக் கொண்டேயிருக்கவேணும்.
  • ரவை சடுதியாக இறுக்கமாகி வருவதை காணலாம், எனவே அதனுள் மீதமுள்ள நெய்யினையும், முந்திரிவத்தல்(plums), முந்திரி பருப்பு(Cashew Nut), மீதமுள்ள ஏலக்காய் பவுடர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்
  • இப்போது அடுப்பின் தீயினை அணைத்துவிடவும், ஆனால் பாத்திரத்தை அடுப்பிலேயே வைத்து நன்கு கிளறிவிடவும்.
  • கேசரி சட்டியில் ஒட்டாமல் அல்வாபோல நன்கு சுருண்டு வரும் போது அடுப்பைவிட்டு இறக்கி ஒரு தட்டிலே கொட்டி ஆறவிடவும்.
  • கேசரி இளம் சூடாக உள்ளபோது தேவையான வடிவத்தில் துண்டுகள் போடலாம்.
  • சுவையான கேசரி தயார்.

Notes

https://www.youtube.com/watch?v=CjQa1IvdyJ0&ab_channel=Vibakya
Tried this recipe?Let us know how it was!

Related Topics

Sowmya Kirubakaran

Vibakya Founder

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Featured Articles
Promoted
Explore