எலுமிச்சை சாதம்

எலுமிச்சை சாதம் / Lemon Rice

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் பிரதானமான அரிசியில் இருந்து சமைத்த சாதம் எலுமிச்சை சாதம் ஆகும்.
No ratings yet
Prep Time 10 mins
Cook Time 45 mins
Course Breakfast, Main Course
Cuisine Indian
Servings 10

Ingredients
  

  • 4 cup வெள்ளை அரிசி வெள்ளைப்பச்சை அரிசி /பொன்னி அரிசி/ பாஸ்மதி அரிசி/ வெள்ளை முத்து சம்பா அரிசி
  • 1/4 cup எலுமிச்சம் சாறு அல்லது 2 பெரிய எலுமிச்சம்பழத்தின் சாறு
  • 2 pinch உப்பு or தேவையான அளவு
  • 1 tsp கடுகு
  • 1 tsp உளுத்தம் பருப்பு
  • 1/2 cup கருவேப்பிலை or தேவையான அளவு
  • 2 tsp நல்லெண்ணெய்
  • 2 tsp பச்சை மிளகாய் or தேவையான அளவு
  • 1 tsp இஞ்சி துருவல் (சிறிதாக நறுக்கியது) or தேவையான அளவு
  • 2 ஏலக்காய்
  • 1 piece கறுவா/பட்டை
  • 2 சிவப்பு மிளகாய்

4 கப் வெள்ளை அரிசியை நன்கு சுத்தமாக கழுவி , ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீர்விட்டு அடுப்பில் கொதிக்கவைத்து , அதனுள் அரிசியை போட்டு- வழக்கமாக சாதம் சமைக்கும் முறையில் வேகவைத்து எடுத்து வைக்கவும்.

    Instructions
     

    • அடுப்பில் ஒருபாத்திரத்தை வைத்து மிதமான தீயிலே சூடாக்கி நல்லெண்ணெய் விட்டு, அது சூடாகியதும் கடுகுசேர்க்கவும்  
    • அந்த கடுகு நன்குபொரியும்போது (கடுகு வெடிக்கும் சத்தம் கேட்கும்) உளுத்தம்பருப்பு சேர்க்கவும்.
    • பின்பு, உளுத்தம்பருப்பு  பொன்னிறம்ஆக மாறும்போது துருவிய இஞ்சி ,கருவேப்பிலை, பச்சை மிளகாய், சிவப்பு  மிளகாய்,கறுவா/பட்டை சேர்த்து கலந்து தாளித்து கொள்ளவும்.
    • அடுத்து , அடுப்பினை அணைத்து, பாத்திரத்தினை கீழே இறக்காமல் மீதமுள்ள செயன்முறையை தொடரவும்.
    • ஏற்கனவே எடுத்து வைத்துள்ள எலுமிச்சம் புளியை , தாளித்த பொருட்களுடன் ஒன்றாக சேர்த்து கலந்து விடவும்.
    • இறுதியாக ,சமைத்து வைத்துள்ள சாதத்தினை இந்த தாளித்த பொருட்களுடன் ஒன்றாக கலந்து மீதம் உள்ள நல்லெண்ணெய் விட்டு, உப்பு , ஏலக்காய் பொடிசேர்த்து நன்றாக கலந்து இறக்கி வைக்கவும்.
    • சுவையான கமகமக்கும் எலுமிச்சை சாதம் தயாராகிவிட்ட்து.

    Notes

    பயன்கள்

    எலுமிச்சை சாதத்தில் பிரியாணி இலை,  இஞ்சி,கறுவா, ஏலம் பயன்படுத்துவதால்,உணவு செரிமானம் சீராக செயல்பட , மலசிக்கல் பிரச்சினைக்கு தீர்வு போன்ற பல நன்மைகளை செய்யும்.
    மேலும், இரத்த சுற்றோட்டத்துக்கு உறுதுணையானது.
    நறுமணமும் , சுவையும் மிக்க பிரியாணி இலையில் நீரிழிவு நோயின் பாதிப்பை குறைக்கும் சக்தி உள்ளது.
    தொலைதூர பயணங்களுக்கு செல்லும்போது இரண்டு நாட்கள் வரையிலும் குளிரூட்டியின்றி பயன்படுத்த உகந்தது.
     

    சிறு குறிப்பு

    • அதிகம் காரம் தேவைப்படின், ஐந்து மிளகினை அல்லது மிளகு பொடிஇணை சிறிது கலந்து விடலாம்.
    • கறுவா , ஏலம், அன்னாசிப்பூ , பிரியாணி இலை என்பன விருப்பத்திற்கு உரிய தெரிவாகும்.
    • எலுமிச்சை சாதத்திற்கு துணை உணவாக , வல்லாரை சட்னி, இஞ்சி துவையல், உருளை கிழங்கு வறுவல்,தேங்காய் கார சட்னி,அப்பளம், மோர் மிளகாய் ,தக்காளி தொக்கு, வெங்காய கொஸ்து போன்றவற்றில் விரும்பியதை சேர்த்துகொள்ளலாம்.

     

    Tried this recipe?Let us know how it was!

    Related Topics

    Sowmya Kirubakaran

    Vibakya Founder

    Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

    Featured Articles
    Promoted
    Explore