புளிக்கூழ் / Tamarind koozh
குளிர்காலத்திற்கு உகந்த புளிக்கூழ் ஆரோக்கியமானதும், உண்பதற்கு இலகுவானதுமான கூழ் வகையை சேர்ந்தது.
No ratings yet
Prep Time 15 mins
Cook Time 30 mins
Course Dessert, Soup
Cuisine Indian
Servings 10
Ingredients
- 1 tbsp புளி (small lemon size) சிறிய எலுமிச்சம் பழம் அளவில் புளியை எடுத்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 1 tsp உப்பு தேவையான அளவு
- 1 tsp கடுகு தேவையான அளவு
- 1 cup நல்லெண்ணெய் தேவையான அளவு
- 3 சிவப்பு மிளகாய்
- 1 pinch பெருங்காய பொடி
- 1/4 cup கருவேப்பிலை
- 3 cup தண்ணீர்
- 1 cup அரிசிமா (சிவப்பு / வெள்ளை) வறுத்தது
Instructions
முதலில், ஓர் பத்திரத்தினை எடுத்து அதனுள், தயாராக எடுத்து வைத்திருக்கும் அரிசிமா,புளிக்கரைசல், உப்பு, பெருங்காயப்பொடி ,ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
- ஓர் கடாயை அடுப்பிலே வைத்து மிதமான தீயிலே வைக்கவும்.
- அடுப்பிலே இருக்கும் கடாய், மெலிதான வெப்பத்தில் உள்ளபோதே-அதனுள் 2 மேசை கரண்டி நல்லெண்ணெய் விட்டு, கடுகு , சிவப்பு மிளகாய், கருவேப்பிலை இம் மூன்று பொருட்களையும் போட்டு பொரிய விடவும்.
- கடுகு முழுவதும் வெடித்தபின்,எடுத்துவைத்துள்ள மா கரைசலை ஒரு கையால் ஊற்றிக்கொண்டே , மறுகையால் கடிகள் விழாதவாறு கிளறிக்கொண்டே இருக்கவும்.
- எடுத்து வைத்துள்ள நல்லெண்ணெயில் மிகுதியாக உள்ளதை முழுவதுமாக மா கரைசலுடன் சேர்த்து கிளறவும்.
- சட்டியில் ஒட்டாமல் மாவின் பதம் வரும்போது அடுப்பை அணைத்து இறக்கி வைத்துவிடவும்.
- சுவையான, ஆரோக்கியமான புளிக்கூழ் தயார்.
Notes
*கடுகு முழுவது வெடித்து பொரிந்திடவேண்டும், ஆனால் கருகிவிட கூடாது.
*புளிக்கு பதிலாக மோர் கரைசலையும் பயன் படுத்தலாம்,அதுவே மோர்கூழ் என அழைக்கப்படும்.
*களி இறுக்கமாக இருப்பது போல அல்லாமல் புளிக்கூழில், தண்ணீர் தன்மையின் நெகிழ்வாய் இருப்பதே அதன் சிறப்பாகும்.
*தேவையேற்படடால் , தேங்காய் சொட்டுகளையும், முந்திரி பருப்பு போன்றவற்ரையும் இந்த களியுடன் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்தும் தயாரிக்கலாம்.
புளி கூழின் பயன்கள்
- சிறுவர்கள் முதல் வயதானவர்கள்வரை பற்களால் அரைத்து உணவினை உண்ண சிரமப்படும் அனைவருக்கும் உண்பதற்கு ஏதுவான உணவு ஆகும்.
- சிலர் காய்ச்சல், உடற்சோர்வு, கர்ப்பகாலம், போன்ற வேளைகளில், வாய்க்கு ருசியாக புளிப்பு சுவையினை உடைய உணவினை விரும்பி உண்ண எண்ணுவார்கள்.அவ்வாறான நேரத்திலே இந்த புளிக்கூழ் சிறந்தது.
- குளிர் காலத்திற்கு ஏற்ப இலகுவில் உணவு செரிமானம் அடைய ஏதுவான சிற்றுண்டி வகைகளில் புலிக்கூழும் அடங்கும்.
Tried this recipe?Let us know how it was!