பிடி கொழுக்கட்டை 

Pidi Kolukattai

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் பாரம்பரிய முறைப்படி தயாராகும் கொழுக்கட்டை வகைகள், பல்சுவையுடன் வாசனையாகவும் இருக்கும் . இனிப்புவகை பலகாரம் அரிசி பிடி கொழுக்கட்டை , இப்பதிவில் வழங்கப்படுகின்றது.
No ratings yet
Prep Time 20 mins
Cook Time 15 mins
Course Dessert
Cuisine Indian
Servings 4

Ingredients
  

  • 1 pinch உப்பு தேவையான அளவு
  • 1 cup சர்க்கரை
  • 1 tsp சுக்கு பொடி
  • 1/2 cup தண்ணீர்
  • 1/2 cup தேங்காய்ப்பூ தேங்காய்ப்பூவை இலேசாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
  • 1 tsp ஏலக்காய் பொடி
  • 1 cup அரிசிமா
  • 1/2 Cup அரசி குருணல் ( chopped Rice)

Instructions
 

ஒரு கடாயை அடுப்பில்வைத்து மிதமான தீயில் 1 கப் பனைவெல்லம் அல்லது சர்க்கரையை சேர்த்து 1/2 கப் அளவு தண்ணீர் விட்டு கிளறவும். அதனுள் ஒரு தேக்கரண்டியளவு உலர்ந்த சுக்குப்பொடியினை (dry ginger powder) சேர்த்து ஒன்றாக கலந்துவிடவும். சர்க்கரை பாகு இரண்டுமுறை கொதித்து வந்தவுடன்(கம்பிபதம் தேவையில்லை) இறக்கி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்த்து வடித்து வைத்துக்கொள்ளவும்.

  • கொழுக்கட்டை மாவு கிளறுவதற்கு ஏற்ப அடி கனமான ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து அது சூடானவுடன், தயாரித்து வைத்துள்ள சர்க்கரை பாகினை சேர்த்து சிறிது கொதிக்கவிடவும்.
  • அடுத்து, ஏற்கனவே எடுத்து வைத்துள்ள அளவுகளின்படி, தேங்காய்ப்பூ ,ஏலக்காய் பவுடர், உப்பு, அரிசிமா , குருணல் அரிசி இவை அனைத்தையும் ஒன்றாக சர்க்கரை பாகினுள் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
  • இப்போது மாவின் பதம் இடியப்பத்திற்கு மாவு கிளறுவதுபோல சட்டியில் ஒட்டாமல் வரும்.
  • உடனே அடுப்பைவிட்டு பாத்திரத்தை இறக்கி, திரும்பவும் கட்டியில்லாதவாறு நன்றாக கிளறிவிடவும்.
  • கை பொறுக்கும் வெப்பத்திலே மாவு உள்ளபோதே ,உங்கள் கையால் கொஞ்சம் மாவினை எடுத்து உள்ளங்கையில் வைத்து கொழுக்கட்டையை இறுக்கமாக தனித்தனியாக பிடித்து , ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
  • இப்போது, அடுப்பில் இட்லி பாத்திரத்திலே நீர் விட்டு, கொழுக்கட்டை அவிப்பதற்காக கொதிக்க விடுங்கள் .
  • அடுத்து, இட்லி தட்டிலே நல்லெண்ணெய் பூசி, பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக , இட்லி தட்டு முழுவதும் இடைவெளி விட்டு அடுக்கி வேக வையுங்கள்.
  • ஏற்கனவே பாதி மா வெந்து இருக்கும் என்பதால், கொழுக்கட்டை விரைவாகவே நீராவியில் வெந்துவிடும்.
  • இறுதியாக இட்லி பாத்திரத்தின் மூடியை திறந்து, ஒரு தட்டிற்கு அவித்த கொழுக்கட்டைகளை ஒரு தட்டிற்கு மாற்றி வையுங்கள்.
  • இப்போது சுவையான பிடிகொழுக்கட்டை தயார்.

Notes

கொழுக்கட்டையின் சிறப்புகள்.
  • இந்து கடவுளான விநாயகருக்கு மிகவும் பிடித்த பலகாரம் கொழுக்கட்டை.
  • விநாயக சதுர்த்தசி கொண்டாட்டத்தின்போது நிவேதனமாக விநாயகருக்கு படைத்து வழிபாடு செய்வார்கள்.
  • நீராவியில் வேகவைக்கும் உணவு பதார்த்தம் என்பதால், ஆரோக்கியம் மிக்கது.
  • இனிப்பு சுவையுடன் உள்ள பிடி கொழுக்கட்டை அனைவரையும் மகிழ்விக்கவல்லது.
கொழுக்கட்டை வகைகள்.
  • இனிப்பு / தேங்காய் பூரண கொழுக்கட்டை ,
  • கார கொழுக்கட்டை 
  • பால் கொழுக்கட்டை
  • பல்லு கொழுக்கட்டை
  • ரவா கொழுக்கட்டை
  • பயறு கொழுக்கட்டை
Tried this recipe?Let us know how it was!

Related Topics

Sowmya Kirubakaran

Vibakya Founder

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Featured Articles
Promoted
Explore