வாழைப்பூ வறை

வாழைப்பூ வறை

குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடியது வாழைப்பூ வறை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன் உள்ள சத்துக்கள் அடங்கிய இந்த வாழைப்பூ வறையை, சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட வயிற்றில் ஏற்படும் உபாதைகளுக்கு மருந்தாகும். வாழைப்பூவினை கசப்பின்றி சமைப்பதற்கான இலகுவான பக்குவம் இந்த பதிவில் வழங்கப்படுகின்றது.
5 from 1 vote
Prep Time 10 mins
Cook Time 15 mins
Course Side Dish
Servings 4

Ingredients
  

  • 1 cup வாழைப்பூ(Chopped Banana flower )
  • 1 pinch கடுகு தேவையான அளவு
  • 1 pinch மஞ்சள்பொடி தேவையான அளவு
  • 1 சிவப்பு மிளகாய்
  • 1 கருவேப்பிலை
  • 1/4 tsp உப்பு தேவையான அளவு
  • 1 tbsp தேங்காய்ப்பூ தேவையான அளவு
  • 1 tbsp நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு
  • 1 tbsp நல்லெண்ணெய்
  • 1 tsp சீரகம்

Instructions
 

வாழைப்பூவினை சுத்தமாக சிறு சிறு துண்டுகளாக அரிந்து , ஒரு பாத்திரத்தில், சிறிது தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள், சிறிது உப்பு, மோர் இந்த நான்கு பொருட்களையும் ஒன்றாக கலந்து 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். 5 நிமிடங்களின் பின்பு, அந்த வாழைப்பூவை நீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து மிதமான தீயிலே வைத்து , பாத்திரம் சூடானதும் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய்யை அதனுள் ஊற்றி கடுகினை போடவும்.
  • கடுகு நன்றாக வெடித்ததும், சீரகம், சிவப்பு மிளகாய் ,சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு , கருவேப்பிலை என்பவற்றை சேர்த்து பொரியவிடவும்.
  • அடுத்து , தயாராக எடுத்து வைத்துள்ள வாழைப்பூவினை சேர்த்து நன்றாகவறுத்து கொள்ளவும்.
  • சுவையான ஆரோக்கியமிக்க வாழைப்பூ வறை தயார்.

Notes

  • வாழைப்பூவின் தாளிதங்களை ஒன்றாக சேர்த்து ஒரே நேரத்திலும் தாளிக்கலாம், அல்லது ஒவ்வொன்றாகவும் சேர்த்து பொரியவிடலாம்.
  • வாழைப்பூவில் கசப்பு சுவையும் ,அதனை நறுக்கியவுடன் கறுப்பாக நிறம் மாறும் தன்மையும் இருப்பதனால், இவற்றை போக்க அதனை அரிந்த உடனேயே (வாழைப்பூவை கொத்துதல்) தண்ணீரில்                  ( மஞ்சள்தூள், உப்பு, மோர் கலந்த நீர்) போட்டு 5 நிமிடம்வரை ஊறவைப்பதால் அதன் கார்ப்பு தன்மை குறையும்.
வாழைப்பூவின் பயன்கள்.
  • உடலுக்கு தேவையான பல உயிர்சத்துக்கள் இதிலே அடங்கியுள்ளது.
  • குறிப்பாக இரும்புசத்து அதிகம் தேவைப்படுவோர் வாழைப்பூவினை வாரத்த்தில் இரண்டு அல்லது மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் .
  • காரம் குறைவான வாழைப்பூ வறுவல் உணவு செரிமானத்தின் பங்களிப்பிற்கு உதவிபுரியும்.
  • வயிற்றில் ஏற்படும் உபாதைகளுக்கும் மருந்தாக அமையும்.
Tried this recipe?Let us know how it was!

Related Topics

Sowmya Kirubakaran

Vibakya Founder

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Featured Articles
Promoted
Explore