வல்லாரை சட்னி
சம்பல் / துவையல்
No ratings yet
Prep Time 10 mins
Cook Time 10 mins
Course Side Dish
Cuisine South Indian
Servings 4 People
Calories 50 kcal
Ingredients
- 200 g வல்லாரை
- தேவையான அளவு கருவேப்பிலை
- 1/2 மூடி தேங்காய்
- 10-15 மிளகு
- 1-3 பச்சை மிளகாய்
- 1 பெரிய வெங்காயம் (சிறிய வெங்காயம் – 10)
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எலுமிச்சம் புளி
- ஒரு பல்லு வெள்ளைப்பூடு (விருப்பத்திற்கு மட்டும்)
- தேவையான அளவு தண்ணீர்
- 2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
- 1 தேக்கரண்டி கடுகு
- 1 தேக்கரண்டி உளுத்த்தம்பருப்பு
- 2 சிவப்பு மிளகாய் (காய்ந்தது)
Instructions
- வல்லாரை இலைகளையும் , அதன் காம்புகளையும் ( பிஞ்சு அல்லது இளம் பகுதி மட்டும்) நன்கு சுத்தம் செய்து அதில் உள்ள தண்ணீர் நன்கு வடியுமாறு எடுத்து வைக்கவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து மிதமான தீயிலே சூடாக்கவும்.
- அதிலே 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, அது சூடாகமுதலே எடுத்து வைத்திருக்கும் 10 மிளகினை போடவும்.
- அதனோடு வல்லாரையை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும்வரை ஒருநிமிடம் நன்கு வதக்கவும்.
- அடுப்பினை அணைக்கவும். பின்பு வதங்கிய வல்லாரையை நன்கு ஆற விடவும்.
- ஒரு மிக்ஸிஜாரில் சம்பலுக்கு தேவையாக எடுத்து வைத்துள்ள பொருட்களை ஒன்றாக போட்டு அதனுடன் ஆறிய வல்லாரையையும் சேர்த்தி சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.
- வெள்ளைப்பூடு சேர்க்க விரும்பாதவர்கள் அதனை தவிர்த்துவிடலாம்.
- உணவு பரிமாறுமுன் சட்னியில் எலுமிச்சம்புளிசிறிது கலந்து பரிமாறலாம்.
சட்னிக்கு தாளிக்க
- ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, அது சூடாகியதும் கடுகு சேர்க்கவும்.
- கடுகு நன்கு பொரியும்போது (கடுகு வெடிக்கும் சத்தம் கேட்கும்) உளுத்தம்பருப்பு சேர்க்கவும்.
- உளுத்தம்பருப்பு பொன்னிறம் ஆக மாறும்போது கருவேப்பிலை, மிளகாய் சேர்த்து இறக்கி சட்னியில் கலந்து விடவும்.
Notes
பயன்கள்:
- வல்லாரை கண்களுக்கு குளிர்ச்சியைத்தரும்
கண்பார்வையினை அதிகரிக்க உதவும் - இரத்த சுத்திகரிப்பிற்கு உதவும்
- வயிற்றில் உள்ள பிரச்சினைகளை குறைக்க உதவும்
- ஜீரண செயற்பாடு சரிவர செயல்படஉணவு செரிமானம் பெற நன்கு உதவும்
- வல்லாரையிலே இன்னும் பலநற்பலன்கள் உள்ளன
- குளிர் காலத்திற்கு உகந்தது
- சாதம் (சோறு) , தோசை, இட்லி , இடியப்பம், புட்டு ரொட்டி , பாண் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட உகந்தது.
- வல்லாரையை சுத்தம் செய்யும்ம்போது முதலில் சிறிது மஞ்சள்தூள், உப்புசேர்த்த நீரிலே அலசி கழுவி, பின்பு சாதாரண நீரிலே நன்கு கழுவி சுத்தம் செய்யலாம்.அனைத்து மரக்கறிகள், கீரைவகைகள், பழங்கள் போன்றவற்றையும் இதே போல் சுத்தம் செய்யலாம்.
- முதலிலேயே எலுமிச்சம் புளி சேர்த்து கலந்துவிட்டால் சட்னி நிறம் மாறிவிடும்.அதனால் சாப்பிட சிறிது நேரம் முன்பாக அதனை சேர்ப்பதே சிறந்தது.
- எலுமிச்சம் புளிக்கு பதிலாக பழப்புளி சேர்ப்பதாயின் சம்பல் அரைக்கும்போதே சேர்க்கலாம்.
- வெள்ளைப்பூடு சேர்ப்பது விருப்பத்திற்குரியதே, சேர்க்காமலும் விடலாம்.
- நல்லெண்ணைக்கு பதில் வேறுஎண்ணெய் சமையலில் பயன்படுத்துவது அவரவர் தெரிவு.
- ஆனால் நல்லெண்ணெய் இந்த சட்னிக்கு சுவையை அதிகரிக்கும் என்பது அனுபவம்.
Nutrition
Calories: 50kcal
Tried this recipe?Let us know how it was!