ரவா கேசரி
5 from 1 vote
Prep Time 10 mins
Cook Time 15 mins
Course Snack
Cuisine Indian
Servings 5
Ingredients
- 2 cup ரவை
- 1/2 cup சீனி தேவையான அளவு
- 1 pinch கேசரி பவுடர் 3 அல்லது 4 துளி food colour
- 4 cup தண்ணீர் தேவையான அளவு
- 1 pinch உப்பு தேவையான அளவு
- 1 pinch ஏலக்காய் பொடி தேவையான அளவு
- 25 g முந்திரி பருப்பு (Cashew Nut) தேவையான அளவு
- 25 g முந்திரியை வத்தல் (Dry grapes) தேவையான அளவு
- 1/2 cup நெய் (Gee)
Instructions
ஒரு பாத்திரத்தை (கடாயை) அடுப்பில் வைத்து மிதமான வெப்பத்தில் இரண்டு தேக்கரண்டி நெய்யினை அந்த கடாயில் ஊற்றி அது மிதமான வெப்பம் ஆகும்போது, தயாராக எடுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு , உலர் திராட்சை அனைத்தையும் பொன்னிறமாக (golden color)நெய்யில் வறுத்து தனியாக ஒருபுறம் எடுத்து வைக்கவும்.அதன் பின்பு மிகுதியாக சிறிது நெய் அந்த கடாயில் இருக்கும் அதே பாத்திரத்தில் ரவையினை சேர்த்து , அதன் நிறம் பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்து தனியாக ஆற வைக்கவும்.
- முதலில் மிதமான தீயிலே (Stove – medium flame) எரியும் அடுப்பில் , அடி கனமான கடாயை(Nonstick Pan) வைத்து அதனுள் 4 கப் தண்ணீரினை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
- தண்ணீர் சூடாக ஆரம்பமாகும்போது அதனுள் சீனி, கேசரி பவுடர்,ஏலக்காய் பொடி மூன்றையும், மிகவும்சிறிதளவேயான உப்பினையும்(salt-optional)சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- தண்ணீர் நிறம் ஆரஞ்சு நிறமாக மாறி , குமிழிகள் போல நன்கு கொதித்து வருவதை இப்போது காணலாம்.
- இதேபோல தண்ணீர் 2 முறை நன்கு பொங்கிவரும்போது, ரவையினை சேர்ப்பதற்கான கொதிநிலையினை அது அடைந்திருக்கும்.
- இந்த தருணத்தி தயாராக எடுத்து வைத்துள்ள வறுத்த ரவையினை ஒரு கையால் தொடர்ந்து தூவிக்கொண்டே இருக்க மறுகையால் இடைவிடாமல் கேசரியினை கட்டிகள் இல்லாமல் கிளறிவிட்டுக் கொண்டேயிருக்கவேணும்.
- ரவை சடுதியாக இறுக்கமாகி வருவதை காணலாம், எனவே அதனுள் மீதமுள்ள நெய்யினையும், முந்திரிவத்தல்(plums), முந்திரி பருப்பு(Cashew Nut), மீதமுள்ள ஏலக்காய் பவுடர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்
- இப்போது அடுப்பின் தீயினை அணைத்துவிடவும், ஆனால் பாத்திரத்தை அடுப்பிலேயே வைத்து நன்கு கிளறிவிடவும்.
- கேசரி சட்டியில் ஒட்டாமல் அல்வாபோல நன்கு சுருண்டு வரும் போது அடுப்பைவிட்டு இறக்கி ஒரு தட்டிலே கொட்டி ஆறவிடவும்.
- கேசரி இளம் சூடாக உள்ளபோது தேவையான வடிவத்தில் துண்டுகள் போடலாம்.
- சுவையான கேசரி தயார்.
Notes
https://www.youtube.com/watch?v=CjQa1IvdyJ0&ab_channel=Vibakya
Tried this recipe?Let us know how it was!