தேங்காய் ரொட்டி Coconut Rotti
தென்னிந்தியா, இலங்கை மக்களின் உணவுவகை தேங்காய் ரொட்டி.
No ratings yet
Prep Time 30 mins
Cook Time 15 mins
Course Breakfast, Snack
Cuisine Indian
Servings 2
Ingredients
- 2 tbsp தேங்காய்ப்பூ (Scrapped Coconut)
- 2 tbsp வெங்காயம் (Chopped Onions)
- 1 tbsp பச்சை மிளகாய் (Chopped green Chili)
- 1 tsp உப்பு (Salt)
- 2 cups கோதுமைமா (Wheat Flour)
- 3/4 cup தண்ணீர் (water)
- 1 tsp பட்டர் / மாஜரின் (Butter/ Margarine)
- 1 tsp நற்சீரகம்&மிளகுபொடி(Cumin&Pepper Powder)
Instructions
- ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள அனைத்துப்பொருட்களையம் ஒன்றாக சேர்த்து ரொட்டிக்கு மாவு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுத்து , ரொட்டி மாவினை ஒரு மூடியினால் மூடி, 5 நிமிடங்களின் பின்னர் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி , அதன்மேல் கோதுமை மாவினை கொஞ்சமாக தூவி வைத்துக்கொள்ளவும்.
- ரொட்டி தட்டும் பலகையில் அந்த மாவு உருண்டையை வைத்து வட்டமாக தட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- எல்லா ரொட்டிகளையும் இவ்வாறே பலகையில் தட்டி வைத்து கொள்ளலாம்
- இப்போது தோசை கல்லினை அடுப்பிலேற்றி அளவான தீயிலே வைத்து , அது சூடானதும் சிறிது எண்ணெய் அல்லது நெய் பூசி , தயாராக வைத்திருக்கும் ரொட்டிகளை அதன்மேல் போட்டு ஒரு மூடிபோட்டு ஒரு நிமிடம் வேக விடவும்.
- அடுத்து, மூடியை திறந்து , ஒவ்வொரு ரொட்டிகளையும் திருப்பி மறுபுறமாக போட்டு , மறுபடியும் மூடி வைக்கவும். (மறுபக்க ரொட்டியின் மேலும் நெய் அல்லது எண்ணெய் போடவும்)
- இப்போது , ரொட்டிகள் இருபுறமும் நன்றாக் வெந்து வருவதற்காக ரொட்டிகளின்மேல் கத்தியினால் அல்லது , தோசை திருப்பியினால் சில கோடுகளை கீறி விடுங்கள்.
- சுவையான கல் ரொட்டி இப்போது தயார்
Tried this recipe?Let us know how it was!